செய்திகள்

வி‌ஷம் கொடுத்து கொன்றதாக மகன் புகார் - பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு

Published On 2018-09-27 10:46 GMT   |   Update On 2018-09-27 10:46 GMT
பெரம்பூரை சேர்ந்த ஒருவர் தனது தாய் சாவில் மர்மம் இருப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆறு மாதத்துக்கு முன் புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
பெரம்பூர்:

பெரம்பூர் ராஜாபாதர் தெருவை சேர்ந்தவர் லலிதா (63). கடந்த மார்ச் மாதம் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதுபற்றி அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த அவரது மகன் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெரம்பூர் திரும்பி வந்த சில நாட்களில் தாய் லலிதா இறந்து போனார்.

இதையடுத்து அவரது உடல் பெரம்பூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இதற்கிடையே பாபுவுக்கும் அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். பின்னர் அவர் அமெரிக்காவிற்கு திரும்பி செல்லவில்லை.

இந்த நிலையில் லலிதா வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதாக பாபுவுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவரது மனைவி நந்தினி அவரது தங்கை சுதா மற்றும் தம்பி மீது போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தாய் லலிதா சாவில் உள்ள மர்மம் குறித்து பாபு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். லலிதாவின் உடலை பரிசோதனை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி இன்று காலை பெரம்பூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்தத லலிதாவின் உடலை 6 மாதத்திற்கு பின்னர் போலீசார் தோண்டி எடுத்தனர். அங்கேயே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

இந்த பரிசோதனை முடிவை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பாபுவின் மனைவி நந்தினியிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News