செய்திகள்

குட்கா விவகாரம் - உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு 3 நாள் சிபிஐ காவல்

Published On 2018-09-27 15:22 IST   |   Update On 2018-09-27 15:24:00 IST
குட்கா ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமாரை 3 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
சென்னை:

தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், நேற்று முன்தினம் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று குட்கா ஊழல் தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமாரை 3 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்டவர்களும், சிபிஐ காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #GutkhaScam #CBI
Tags:    

Similar News