செய்திகள்

போச்சம்பள்ளி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2018-09-26 20:32 IST   |   Update On 2018-09-26 20:32:00 IST
மது விலையை விட கூடுதலாக பணம் வாங்கிய தகராறில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சர்தார் என்கிற நூருல்லா (வயது 24). 

அதே பகுதியைச் சேர்ந்த கமல்பாஷா மகன் ஓஷின் என்கிற இம்ரான் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நூருல்லாவும், இம்ரானும் நேற்று மாலை 3 மணியளவில் சந்தூரில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது குடிக்க சென்றனர். அங்கு பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர் மாரப்பனிடம் பணம் கொடுத்து மது பாட்டில்களை வாங்கினர். அப்போது மதுவின் விலையைவிட கூடுதலாக மாரப்பன் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த நூருல்லா, இம்ரான் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாரப்பனை மார்பிலும், உடலிலும் கல்லை எடுத்து தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாரப்பன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News