செய்திகள்

துறையூர் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூ. சார்பில் பிரச்சார இயக்க கூட்டம்

Published On 2018-09-26 18:15 IST   |   Update On 2018-09-26 18:15:00 IST
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூ. சார்பில் பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது.
துறையூர்:

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எ.ஐ.டி.யு.சி சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாள் பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி  பேசு கையில், மக்களை பாதுகாக்கவே இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது,  பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா நிலங்களை ஹைட் ரோகார்பன் திட்டத் தின் மூலம் அழித்து வருவதாகவும், யேற்றத்தால் தினசரி விலைவாசி உயர்ந்து வருகிறது என்று கூறினார்.  

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முன்னாள் எம்.பி செல்வ ராசு, முன்னாள்  எம்.எல்.ஏ சிவபுண்ணியம், மாவட்ட நிர்வாகக் குழு கணேசன், சிவசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராசு, உலகநாதன் ஒன்றிய செயலாளர் சேகர், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News