செய்திகள்

நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது - எச்.ராஜா முறையீடு

Published On 2018-09-25 11:13 IST   |   Update On 2018-09-25 11:13:00 IST
உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என எச்.ராஜா தரப்பு இன்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
சென்னை:

விநாயகர் சிலை ஊர்வலத்தில்  பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் தகாத வார்த்தைகளால் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா 4 வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இல்லை என எச்.ராஜா தரப்பில் இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்  ரமானியிடம் முறையிடப்பட்டது.



தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், எச்.ராஜாவை ஆஜராக உத்தரவிடுவதற்கு நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வுக்கு அதிகாரம் இல்லை எனவும் எச் ராஜா தரப்பு வக்கீல் முறையிட்டார்.

அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தகில் ரமானி, உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் இதுபற்றி ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி செல்வம் அமர்வு பிறப்பித்த உத்தரவு மற்றும் தங்கள் தரப்பு கருத்துக்களை எச்.ராஜாவின் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
Tags:    

Similar News