செய்திகள்

அரசு பள்ளி வளாகத்தில் இருந்த 15 மரங்கள், வேருடன் வேறு இடத்தில் நடப்பட்டன

Published On 2018-09-24 14:21 GMT   |   Update On 2018-09-24 14:21 GMT
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த 12 புளிய மரங்கள் , 3 வேப்ப மரங்கள் வேருடன் வேறு இடத்தில் நடப்பட்டன.
பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் உண்டு, உறைவிடப்பள்ளி மூலம் 1.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன், அங்கு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் 15 ஆண்டுகள் வளர்ந்த 12 புளிய மரங்கள், 3 வேப்பமரங்கள் இருந்தன.

பசுமை மாறாமல் சேதம் அடையாமல், மரங்களை காப்பாற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி ஆலோசனைப்படி தருமபுரி மக்கள் மன்றம், பசுமை அமைப்பின் மூவம் பொக்லைன் உதவியோடு, 15 மரங்களும், வேருடன் எடுத்து சென்று மாற்று இடத்தில் நடப்பட்டன. 

இவை அனைத்தும் பட்டுப் போகாமல் இருக்க ஆழமான குழி தோண்டி இயற்கை உரங்களிட்டு, தண்ணீர் ஊற்றப்பட்டது. இதில்  கல்வி திட்ட உதவி அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News