செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: தமிழக அரசின் நடவடிக்கைகளில் ஓட்டை உடைசல் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2018-09-22 05:09 GMT   |   Update On 2018-09-22 05:09 GMT
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நடவடிக்கைகளில் ஓட்டை, உடைசல் எதுவும் இல்லை என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam #sterliteprotest

மதுரை:

தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர் மனதில் பட்டதை பேசி இருக்கிறார். ஆனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை வி‌ஷயத்தில் முறையாக செயல்பட்டு வருகிறது. இதில் எந்த ஓட்டை, உடைசலும் இல்லை.

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு எடுத்த நடவடிக்கையில் எந்த பிரச்சினையும் இல்லை. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.


நெல்லையில் தாமிர பரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்புக்கு பின்னர் அ.தி.மு.க. அரசு இருக்காது என்று தினகரன் கூறிவருகிறார். அது அவரது கருத்து. அதுபற்றி நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு ஓ.ன்னீர்செல்வம் கூறினார். #ADMK #EdappadiPalaniswami #OPanneerSelvam #sterliteprotest

Tags:    

Similar News