செய்திகள்

பரமக்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்தல் - லாரி டிரைவர் கைது

Published On 2018-09-21 18:15 GMT   |   Update On 2018-09-21 18:15 GMT
பரமக்குடி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி:

பரமக்குடி அருகே ராஜாக்கள்பட்டி சாலையில் பார்த்திபனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டபோது உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கட்டியாயலை சேர்ந்த அருண்குமார்(வயது 25) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல போகலூர் யூனியன் முதலூர் அருகே அந்த பகுதியை சேர்ந்த பாலாஜி, மணிமாறன், சிலம்பரசன் ஆகியோர் மணல் அள்ளுவதாக சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் போலீசார் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News