செய்திகள்

அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை கையாள தெரியாமல் தடுமாறும் கருணாஸ்- அமைச்சர் உதயகுமார் தாக்கு

Published On 2018-09-20 09:55 GMT   |   Update On 2018-09-20 10:00 GMT
அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் கருணாஸ் நிலை தடுமாறியிருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்தார். #Karunas #RBUdhayaKumar
மதுரை:

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது, கூவத்தூரில் நான் இல்லாமலா இந்த அரசு உருவானது? என்று கூறிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் இழுத்தார்.

‘முதல்வரே நான் அடித்து விடுவேன் என பயப்படுகிறார் போலும். இந்த கருணாஸ் இல்லாமல் எப்படி அரசாங்கம் ஏற்பட்டது? கூவத்தூர் ரிசார்ட்டை காட்டினது நான்தான். என்றார். அத்துடன் காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், அ.தி.மு.க.வில் சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


கருணாஸ் பேசியது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, கருணாஸ் பேச்சு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதற்கிடையே மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “கருணாஸ் அதிர்ஷ்டத்தில் கிடைத்த பதவியை எவ்வாறு கையாளுவது எனத் தெரியாமல் நிலை தடுமாறியுள்ளார்” என தெரிவித்தார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார். #RBUdhayaKumar #Karunas
Tags:    

Similar News