செய்திகள்

தேனியில் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவி தொகை பெற வாய்ப்பு

Published On 2018-09-19 17:05 IST   |   Update On 2018-09-19 17:05:00 IST
தேனி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் மகன்-மகள்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி:

பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2018-19-ம் கல்வியாண்டிற்கான தொழிற்முறை மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகள் படிக்கும் முன்னாள் படை வீரர்களின் மகன்- மகள்களுக்கு கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முன்னாள் படைவீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்திட ஏதுவாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதள முகவரியில் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஓராண்டிற்கு ரூ.25000 மற்றும் மாணவிகளுக்கு ரூ.27 ஆயிரம் வழங்கப்படும். எனவே பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் 2018-19-ம் கல்வியாண்டிற்கான தொழிற்முறை மற்றும் தொழிற்சார்ந்த படிப்புகள் முதலாம் ஆண்டில் படிக்கும் முன்னாள் படை வீரர்களின் மகன்-மகள்களுக்கு, கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், முன்னாள் படை வீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களை வருகின்ற நவம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News