செய்திகள்

மாதவராவுக்கு சொந்தமான குடோனில் இருந்து டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்

Published On 2018-09-14 12:00 GMT   |   Update On 2018-09-14 12:00 GMT
குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டன் கணக்கில் குட்கா பொருட்களும் 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam #CBIRaid
சென்னை:

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். 

சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைக்காவல் முடிந்த நிலையில், அவர்கள் மீண்டும் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் விசாரணை காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு அவருக்கு சொந்தமான சென்னை அண்ணாமலை இன்டஸ்ட்ரீஸில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையின் போது டன் கணக்கில் குட்கா மூலப்பொருட்களும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News