செய்திகள்

லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகை பறிமுதல்

Published On 2018-09-11 17:18 IST   |   Update On 2018-09-11 17:18:00 IST
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் பாபு, லஞ்சம் வாங்கியதாக கைதான நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம், நகை கைப்பற்றப்பட்டுள்ளது. #RTO #DVACRaid
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு என்பவர் வாகன தரச்சான்றிதல் வழங்க லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, செம்மண்டலத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. கையாள் எண்ண முடியாததால் பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டது. ரூ.35 லட்சம் பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News