செய்திகள்

சேதராப்பட்டில் கனரக வாகனங்களை வழிமறித்து காங்கிரசார் போராட்டம்

Published On 2018-09-10 10:21 GMT   |   Update On 2018-09-10 10:21 GMT
சேதராப்பட்டில் கனரக வாகனங்களை வழிமறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

சேதராப்பட்டு:

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நடந்த பந்த் போராட்டத்தையொட்டி சேதராப்பட்டில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.

இந்த நிலையில் சேதராப்பட்டு மும்முனை சாலையில் வடக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் புருஷோத்தமன், காங்கிரஸ் பிரமுகர் நாகரத்தினம் ஆகியோர் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் ஏற்றி வந்த கண்டெய்யினர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை வழிமறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் மோதிலால், விடுதலைசிறுத்தை கட்சி நிர்வாகிகள் சத்தியமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் காங்கிரசார் மற்றும் தி.மு.க.-விடுதலை சிறுத்தைகட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். #BharathBandh #PetrolDieselPriceHike 

Tags:    

Similar News