செய்திகள்

திருமாவளவன் பிறந்த நாளையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி இன்று மாலை தொடங்குகிறது

Published On 2018-09-08 08:58 GMT   |   Update On 2018-09-08 08:58 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி தாய்மண் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது. #Thirumavalavan #Kabaddi

சென்னை:

சென்னை சாலிகிராமம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 6 மணிக்கு கபடி போட்டி தொடங்குகிறது.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40 அணிகள் பங்கேற் கின்றன. கபடி போட்டி தொடக்க விழாவிற்கு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வி.கோ.ஆதவன் தலைமை தாங்குகிறார். தயாளன், பனையூர் பாபு ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கிறார்கள்.

போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் பண முடிப்பும், அம்பேத்கர் நினைவு கோப்பையும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரம் பணமுடிப்பும் காமராஜர் நினைவு கோப்பையும் வழங்கப்படுகிறது.

3-வது பரிசாக ரூ.30 ஆயிரம் பணமுடிப்பும் மற்றும் தொல்காப்பியர் நினைவு கோப்பையும், 4-வது பரிசாக ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும், தன்ராஜ் பாளையம்மாள் நினைவு கோப்பையும் வழங் கப்படுகிறது.

நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலை இறுதி போட்டி நடத்தப்பட்டு இரவு பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பணமுடிப்பை வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் வி.கோ.ஆதவன், விருகை தொகுதி செயலாளர் கரிகால் வளவன், ராஜசேகரன், தி.மு.க. வக்கீல் எம்.ஸ்ரீதர், ஏ.எம்.கணேஷ், கோ.ராம லிங்கம், வி.என்.கண்ணன், ஜெ.செந்தில்குமார், வி.என். ஜெயகாந்தன், அப்துல் அஜீஸ், திலீப், மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், இரா.செல்வம், நா.செல்லத் துரை, அம்பேத்வளவன், அன்புசெழியன், சூ.க.ஆத வன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News