செய்திகள்

சாத்தான்குளத்தில் அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்- டிரைவருக்கு வலைவீச்சு

Published On 2018-09-07 17:19 IST   |   Update On 2018-09-07 17:19:00 IST
சாத்தான்குளத்தில் முன்விரோத தகராறில் அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதலில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சாத்தான்குளம்:

சாத்ததான்குளம் பண்டாரபுரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 69). அ.ம.மு.க. நிர்வாகியாக இருந்து வருகிறார். ராஜபாண்டிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவரான தங்கவேலு என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அந்த நிலத்தை அளப்பதற்காக ராஜபாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ராமர் எப்படி நிலத்தை அளக்கலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராமர், ராஜபாண்டியை அடித்து உதைத்துள்ளார்.

இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் வழக்குப்பதிவு செய்து கார்டிரைவர் ராமரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News