செய்திகள்

ஊட்டி நகருக்குள் புகுந்த காட்டெருமை- பொதுமக்கள் பீதி

Published On 2018-09-03 16:33 GMT   |   Update On 2018-09-03 16:33 GMT
ஊட்டி நகருக்குள் காட்டெருமை தொடர்ந்து புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

கோவை:

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, தூதுர் மட்டம் உள்ளிட்ட இடங்களில் வன பகுதிகளில் ஏராளமான காட்டு எருமைகள் உள்ளன.

இந்த காட்டு எருமைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் காட்டு எருமை ஒன்று நகர் பகுதிக்குள் புகுந்தது. இதனை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்கு விரட்டி விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ஊட்டி கமர்சியல் சாலை, தினசரி சந்தை பகுதிக்குள் காட்டெருமை புகுந்து சுற்றி திரிந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

காட்டெருமை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Tags:    

Similar News