செய்திகள்

பவானி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்- கிராம மக்கள் வலியுறுத்தல்

Published On 2018-09-03 12:35 GMT   |   Update On 2018-09-03 12:35 GMT
பவானி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு:

பவானி அடுத்த ஜம்பையை சேர்ந்த மக்கள் சிலர் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் கதிரவனிடம் மனு கொடுத்தனர்.

ஜம்பை பகுதியில் 3000 பேர் வசித்து வருகிறோம் எங்கள் ஊரில் பவானி ஆறு ஓடுகிறது ஜம்பைக்கு வடக்கில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் பவானி ஆற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பவானி ஆற்றில் பவானி டவுனில் ஆரம்பித்து சத்தியமங்கலம் வரை சட்டவிரோதமாக இரவு பகல் பார்க்காமல் ஒரு சிலர் மணல் அள்ளி வருகிறார்கள்.

இதனால் ஆறு மாசுபட்டு சாக்கடை நீராக மாறிவிடுகிறது தற்போது பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஓரளவு மணல் கவனத்திற்கு வந்துள்ளது. இதை சாதகமாக்கிக் கொண்டு ஒரு கும்பல் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருகிறது.

இதனால் ஆறு மாசடைந்து குடிநீர் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது இது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளோம். எனவே ஜம்பை பவானி ஆற்றை பாதுகாக்கவும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோன்று ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் கலெக்டர் கதிரவனிடம் மாதம் ஒருமுறை நூல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு நூற்பாலைகளில்ராயன் நூல்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும். விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீடு தேவை என்றும் கூறி உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News