செய்திகள்

கண்டாச்சிபுரம் அருகே புதிதாக டாஸ்மாக்கடையை திறக்கக் கூடாது- அதிகாரியிடம் பெண்கள் மனு

Published On 2018-09-03 17:54 IST   |   Update On 2018-09-03 17:54:00 IST
கண்டாச்சிபுரம் அருகே புதிதாக டாஸ்மாக்கடையை திறக்கக் கூடாது என மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது ஆயந்தூர். இங்குள்ள காரணை பெருஞ்சானூர் சாலையில் அரசு சார்பில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து அங்கு அதிகாரிகள் தீவிர ஏற்பாடு செய்து வந்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு டாஸ்மாக்கடை திறக்கப்படும் என தெரிகிறது. இதுபற்றிய தகவல் ஆயந்தூர் கிராம மக்களுக்கு தெரியவந்தது.

இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மனுக்கள் வாங்கிக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி பிரியாவிடம் மனு கொடுத்தனர்.

அதில் எங்கள் கிராமத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. அந்த கடையை திறக்கக் கூடாது. அவ்வாறு திறந்தால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News