செய்திகள்
சித்தமல்லி கிராமத்தில் நடைபெற்ற கோ பூஜையில் கவர்னர் கலந்து கொண்டார்.

பசுக்களை பாதுகாக்க அதிக கோசாலை அமைக்க வேண்டும்- கவர்னர் பன்வாரிலால்

Published On 2018-09-03 08:16 GMT   |   Update On 2018-09-03 08:16 GMT
பசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார். #TNGovernor #BanwarilalPurohit
காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த சித்தமல்லி பகுதியில் உள்ள கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த உகோ பூஜையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.

உத்திரமேரூர் வந்த கவர்னருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது, கோட்டாட்சியர் ராஜு, சுந்தர் எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கோ பூஜை செய்து கவர்னர் பன்வாரிலால் வழிபட்டார். பின்னர் அங்குள்ள பசுக்களுக்கு உணவு அளித்தார்.

பின்னர் அவர் அங்கிருந்த திரளான கிராம மக்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களிடம் கூறும்போது, “நாடு முழுவதும் பசுக்கள் பேணிக்காக்கப்பட வேண்டும். பசுக்களை திரளானோர் வழிபட்டு வருகின்றனர். பசுக்களை பாதுகாக்க அதிக அளவில் கோசாலைகளை அமைக்க வேண்டும்” என்றார். #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News