செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் திடீர் ஸ்டிரைக்

Published On 2018-09-03 07:23 GMT   |   Update On 2018-09-03 07:23 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் புன்னக்காயலில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 400 நாட்டுப்படகுகள் உள்ளன. கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.

விசைப்படகுகளால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் விசைப்படகுகளை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்த படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் இன்று புன்னக்காயல் கடலில் கூடினார்கள். கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்பு கொடிகள் கட்டியிருந்தனர். #tamilnews
Tags:    

Similar News