செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2018-09-01 12:04 IST   |   Update On 2018-09-01 12:04:00 IST
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில் பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் மனதில் நிறுத்தி மகிழ்வுடன் வாழ வேண்டுமென்று முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami #KrishnaJeyanthi
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியினை உலகுக்கு உணர்த்திய பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொளகிறேன்.

“அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்ற கிருஷ்ணர் பிறந்த இத்திருநாளில், மக்கள் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்புகள், பலகாரங்களை படைத்து, குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை வீட்டின் வழிநெடுக பதித்து, பகவான் கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வந்தருளியதாக பாவித்து, கிருஷ்ண பகவானை போற்றி வணங்கி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.



ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில், பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, கடமை உணர்வுடனும், மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #KrishnaJeyanthi

Tags:    

Similar News