செய்திகள்

காவியை கேவலப்படுத்துவதா? - மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் கண்டனம்

Published On 2018-08-31 05:41 GMT   |   Update On 2018-08-31 05:41 GMT
பா.ஜ.க.வைக் கேவலப்படுத்துவதற்காகக் காவியைக் கேவலப்படுத்தினால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #IlaGanesan #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பா.ஜனதா உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் காவி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இல.கணேசன் எம்.பி. கூறியதாவது:-



தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முகநூல், டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், அவர் தலைவராகப் பதவி ஏற்றவுடன் பேசிய பேச்சு மிகவும் தவறான ஒன்று.

இந்த தேசத்தில் காவி மயம் இருப்பது ஒன்றும் தவறு இல்லை. தமிழகத்தில் எந்த கிராமத்துக்குப் போனாலும் காவி அணிந்து வந்தால் வணங்குகிறார்கள். காவி புனிதமானது. பா.ஜ.க. ஒரு காவிக்கட்சி என்று சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் பா.ஜ.க.வைக் கேவலப்படுத்துவதற்காகக் காவியைக் கேவலப்படுத்தினால் அதைப்பொறுத்துக் கொள்ள மாட்டேன்.

தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நிறைய கற்க வேண்டும். அப்படி இல்லையெனில் பா.ஜ.க. பாடம் கற்றுக் கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #IlaGanesan #MKStalin

Tags:    

Similar News