செய்திகள்

பழனி நகர கூட்டுறவு வங்கியில் வேட்பாளர் பட்டியல் கிழிப்பு- தி.மு.க.வினர் திடீர் மறியல்

Published On 2018-08-29 13:13 GMT   |   Update On 2018-08-29 13:13 GMT
பழனி நகர கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் ஒட்டப்பட்ட வேட்பாளர் பட்டியலை சிலர் கிழித்து சென்றதால் இதனை கண்டித்து திமுகவினர் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.

பழனி:

பழனி காந்தி ரோட்டில் பஸ் நிலையம் அருகே பழனி நகர கூட்டுறவு வங்கி உள்ளது.இவ்வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளுக்கு இறுதியாக 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இப்பட்டியலை வங்கி அலுவலகம் முன்பு நேற்று பகல் ஒட்டப்பட்டது.

அதில் தேர்தல் நடைபெறும் நாள் நேரம் மற்றும் தேர்தல் குறித்த குறிப்புகள் அடங்கியிருந்தது. இந்நிலையில் அங்கு வந்த சிலர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேட்பாளர் பட்டியல் கிழித்து எறியப்பட்டது குறித்த தகவல் கிடைத்த திமுகவினர் பழனி நகர கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிமுகவினர் தேர்தலை நடத்த கூடாது என்று திட்டமிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க துணைபதிவாளர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோசமிட்டனர். அதன் பின்னர் கூட்டுறவு சங்க துணைபதிவாளர் குழந்தைவேலிடம் மனு கொடுத்துள்ளனர். அவர் அவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News