செய்திகள்

அந்தியூர் அருகே காற்றுடன் மழை - ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-08-29 11:46 GMT   |   Update On 2018-08-29 11:46 GMT
அந்தியூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தபோது மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதே போல் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளத்தில் இருந்து தாமரைகரை செல்லும் ரோட்டில் பலத்த காற்றால் பெரிய மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ரோட்டில் கிடந்த அவர்கள் அப்புறப்படுத்தினர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
Tags:    

Similar News