செய்திகள்

தேனி அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன், மாணவி தற்கொலை

Published On 2018-08-27 08:14 GMT   |   Update On 2018-08-27 08:14 GMT
தேனி அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி:

தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லை நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் சங்கீதா (வயது 22). அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டு மாலை நேர கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மனமுடைந்த சங்கீதா வி‌ஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிழந்தார்.

கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் கபிலன் (வயது 17). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அருகே அல்லி நகரம் கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவரது மனைவி கிருஷ்ணவேனி. இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News