செய்திகள்

ஐஸ்அவுசில் வீட்டில் பதுக்கிய 70 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2018-08-26 15:37 IST   |   Update On 2018-08-26 15:37:00 IST
ஐஸ்அவுசில் வீட்டில் பதுக்கிய 70 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் கடை மற்றும் வீடுகளில் பதுக்கி விற்கப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக பலர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். ஆனாலும் குட்கா போதை பொருட்கள் பதுக்குவது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்து சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 70 கிலோ குட்கா மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வீட்டில் இருந்த சுரேஷ், நூருல்லா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News