செய்திகள்

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.9 லட்சம் மோசடி

Published On 2018-08-25 15:31 IST   |   Update On 2018-08-25 15:31:00 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரை அடுத்த மூணான்டிபட்டியை சேர்ந்தவர் காசிமாயன். அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு நரசிங்கம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பழக்கம் ஆனார். அவர் கியாஸ் ஏஜென்சி தொடங்க போவதாகவும் அதில் பங்குதாரராக சேருங்கள் என்றும் கூறி உள்ளார்.

இதனை நம்பி காசிமாயன் ரூ.9 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசு கியாஸ் ஏஜென்சி எதுவும் தொடங்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த காசி மாயன் பணத்தை திருப்பிக் கேட்டார்.

ஆனால் அதனை திருப்பி தராமல் திருநாவுக்கரசு கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் காசிமாயன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News