செய்திகள்

கோவையில் இருந்து கேரளாவுக்கு காங். சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

Published On 2018-08-23 12:24 GMT   |   Update On 2018-08-23 12:24 GMT
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
கோவை:

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. அரிசி, பருப்பு, மாத்திரைகள், குடிநீர் பாட்டில்கள், துணிமணிகள், போர்வை, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கணபதி சிவக்குமார், பச்ச முத்து, சொக்கம்புதூர் கனகராஜ், சவுந்திர குமார், வக்கீல் கருப்புசாமி, காந்த குமார், கேபிள் வினோத், கு.பே.துரை, துரை ராஜ், பாசமலர் சண்முகம்,

செல்வபுரம் ஆனந்த், கார்த்திக், பரமசிவம், சிங்கை ஜவஹர்.மகளிர் அணி மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, சிவகாமி, திலகவதி, மஞ்சுளா, மல்லிகா, தமிழ் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News