செய்திகள்

தூத்துக்குடியில் நீர் நிலைகள், விவசாய நிலங்களில் காற்றாலைகள் அமைக்க ஐகோர்ட் தடை

Published On 2018-08-23 10:17 GMT   |   Update On 2018-08-23 10:33 GMT
தூத்துக்குடியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் விதிமுறைகளை மீறி காற்றாலைகள் அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. #WindPower #MadrasHC
மதுரை:

தூத்துக்குடி பராக்கிரமபாண்டியன் பகுதியில் நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி காற்றாலை அமைப்பதாக அருமைராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, காற்றாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News