செய்திகள்

முதியவரை கீழே தள்ளியதில் மரணம்- வாலிபர் மீது கொலை வழக்கு பதிவு

Published On 2018-08-22 18:14 IST   |   Update On 2018-08-22 18:14:00 IST
செல்போனில் பேசியதை தட்டிக் கேட்ட முதியவரை கீழே தள்ளியதில் மரணமடைந்தார். இது குறித்து வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே மணல்மேடு போலீஸ் சரகம் கிழாய் கிராமம் பாரதி நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 60). விவசாய கூலி. அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மணிமாறன் (வயது 28). விவசாய கூலி. சம்பவதன்று அப்பகுதி பஸ் ஸ்டாப்பில் குமாரசாமி படுத்திருந்த போது அங்கு நின்று கொண்டு மணிமாறன் செல்போனில் சத்தமாக பேசி கொண்டு இருந்தாராம்.

இதனால் அவரை குமாரசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த மணிமாறன் அவரை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்து இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது குமாரசாமி மயங்கி கிடந்ததால் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து மணிமாறனை கைது செய்தார். #tamilnews
Tags:    

Similar News