செய்திகள்

பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கொள்ளை வழக்கில் கார் டிரைவர் கைது

Published On 2018-08-22 15:10 IST   |   Update On 2018-08-22 15:10:00 IST
தனியார் பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர்:

ஈரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம். தனியார் பால் நிறுவன உரிமையாளர். வியாபாரத்தை விரிவுபடுத்த இவருக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது.

அதற்காக சிலரை அணுகிய போது பாங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சென்னை வரவழைத்தனர். பட்டினபாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் 3 பேர் அவரை சந்தித்து பேசினர். அப்போது கடன்பெற்று தர ரூ.1 கோடி தேவைப்படும் என கூறி அதை பெற்றுக் கொண்டனர்.

காரில் வந்த அவர்கள் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மோகன சுந்தரம் போலீசில் புகார் செய்தார். அதைதொடர்ந்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொள்ளை கும்பலுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News