செய்திகள்

கர்ப்பமாக இருப்பதாக கூறி பெண்ணுக்கு 8 மாதம் சிகிச்சை- அரசு ஆஸ்பத்திரி மீது வாலிபர் புகார்

Published On 2018-08-20 10:31 GMT   |   Update On 2018-08-20 10:31 GMT
மதுரை விரகனூர் அருகே கர்ப்பமாக இருப்பதாக கூறி பெண்ணுக்கு 8 மாதம் சிகிச்சை அளித்த அரசு ஆஸ்பத்திரி மீது வாலிபர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

மதுரை:

மதுரை விரகனூர் அருகே உள்ள கோழிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் இன்று மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு கையில் மனுவுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் கூறுகையில், எனது மனைவி யாஸ்மின் கர்ப்பமாக இருப்பதாக கோழிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் தெரிவித்தனர். 3 மாதம் சிகிச்சை அளித்த அவர்கள் அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு கடந்த 8 மாதங்களாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது குழந்தை இருப்பதற்கான அறிகுறி இல்லை. வயிற்றில் கட்டி இருப்பதுபோல் தெரிகிறது என அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கட்டியும் இருப்பதாக தெரியவில்லை. இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியனிடம் கேட்டபோது, யாஸ்மின் சிகிச்சை அறிக்கைகள் எனக்கு தற்போது தெரியவில்லை. மருத்துவச்சான்று குறிப்புகளை பார்த்தபிறகு தவறு நடந்து இருப்பது தெரியவந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News