செய்திகள்
கிரிக்கெட் விளையாட்டில் மோதல்: வாலிபரை பாட்டிலால் குத்திய தொழிலாளி கைது
சேலம் வீராணம் அருகே வாலிபரை பாட்டிலால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் வீராணம் அருகே உள்ள எம்.பாலப்பட்டி மைதானத்தில் கன்னங்குறிச்சியை சேர்ந்த குணா (வயது 25) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் எம்.பாலப்பட்டியை சேர்ந்த அஜித்குமார்(22) என்பவருக்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குணா கீழே கிடந்த உடைந்த பாட்டிலை எடுத்து அஜித்குமாரை குதித்தினார்.
இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணாவை கைது செய்தனர். இவர் வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.