செய்திகள்

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் முற்றுகை போராட்டம்

Published On 2018-08-18 17:54 IST   |   Update On 2018-08-18 17:54:00 IST
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள முதல்வர் அறையை மகளிர் குழுவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்:

நீலகிரி ஊராட்சி குழு கூட்டமைப்பில் சுமார் 40 மகளிர் குழுக்கள் இயங்கி வருகிறது. அரசு மருத்துவ மனைகளில் கழிவறை சுத்தம் செய்யும் பணிக்கு இந்த குழுவிற்கு டெண்டர் விடப்பட்டு மகளிர் குழு சார்பில் பெண்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது திடிரென்று பெண்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டு தனியாருக்கு இந்த டெண்டர் வழங்கபட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

எனவே தனியாருக்கு விடப்பட்டுள்ள டெண்டரை மகளிர் குழுக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை நீலகிரி ஊராட்சி குழு கூட்டமைப்பு சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி  மருத்துவ மனையில் உள்ள முதல்வர் அறையை முற்றுகையிட்டனர்.

இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தேவி தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் சந்திரா, பொருளாளர் ஸ்டில்லா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News