செய்திகள்
எல்லை பாதுகாப்பு படை வீரர் கை துண்டிப்பு: 2 பேர் கைது
வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் எல்லை பாதுகாப்பு படை வீரர் கை துண்டானது குறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி பெருமாள்பேட்டை சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் அங்கு நடந்த கோவில் திருவிழாவில் ஜவகர் (27) என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஜவகர் கத்தியால் பார்த்திபனை தாக்க முயன்றார். பார்த்திபன் தனது கையால் தடுத்த போது கை துண்டானது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவகர், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். #tamilnews