செய்திகள்

சம்பள உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டம்: தனியார் ஆலையில் தொழிலாளர் குடும்பத்தினர் முற்றுகை

Published On 2018-08-18 06:04 GMT   |   Update On 2018-08-18 06:04 GMT
தனியார் பாய்லர் தயாரிக்கும் ஆலையில் சம்பள உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினர் ஆலையை முற்றுகையிட்டனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையில் தனியார் பாய்லர் தயாரிக்கும் ஆலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் 140 ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலை நிறுத்தம், சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். #tamilnews
Tags:    

Similar News