செய்திகள்

நங்கவள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம்-நகை கொள்ளை

Published On 2018-08-11 19:58 IST   |   Update On 2018-08-11 19:58:00 IST
நங்கவள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 7 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நங்கவள்ளி:

ஜலகண்டாபுரம் அருகே செலவடை கிராமத்தை அடுத்த கோயப்பெருமாள் கோவில் கரட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன் (66). இவரது மகன் அருண்குமார் சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்பதர்காக கடந்த 8-ந் தேதி சென்றுவிட்டார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அங்கு வந்து வீட்டை பார்த்தப் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஓடுகள் சிதறிகிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 7 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசில் விஸ்வநாதன் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் காட்டிநாயக்கன்பட்டியில் உள்ள முருகேசன் என்பவரின் பூக்கடையும் உடைத்து பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று உள்ளது தெரியவந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News