செய்திகள்

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆய்வு

Published On 2018-08-11 10:40 GMT   |   Update On 2018-08-11 10:40 GMT
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்துதரக் கேட்டு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை:

மதுரை மாட்டுத்தாவணியில் மலர் வணிக வளாகம், நெல் வணிக வளாகம் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இன்று காலை மதுரை வடக்குசட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பூ மார்க்கெட் சென்று ஆய்வு செய்தார். அவரை பூக்கடை ராமச்சந்திரன், முத்து ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து வணிக வளாகம் முழுவதையும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சுற்றிப்பார்த்தார். அப்போது அவரிடம் வியாபாரிகள் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கடைகளை ஒதுக்கிய வியாபாரிகளுக்கு பத்திரப்பதிவு செய்து தரவும் கேட்டுக் கொண்டனர்.

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது புறநகர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணாநகர் முருகன், அபுதாகீர் ஆகியோரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News