செய்திகள்

வேலூரில் பல்பு வாங்கியதில் ரூ.10 லட்சம் ஊழல் - அதிமுக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மீது வழக்கு

Published On 2018-08-07 17:24 IST   |   Update On 2018-08-07 17:24:00 IST
வேலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பல்பு வாங்கியதில் ரூ.10 லட்சம் முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர், அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டில் பி.டி.ஓ.வாக பணியாற்றியவர் ரவி. இந்த காலகட்டத்தில் கீழ்மொணவூர், அன்பூண்டி, மேல்மொணவூர், பூதூர், கருகம்புத்தூர் ஆகிய 5 கிராமங்களில் ரூ.10 லட்சம் மதிப்பில் 146 எல்.இ.டி. பல்புகள் பொருத்தியதாக போலியான பில் தயாரித்து தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து 2 முறை காசோலை கொடுத்து ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்து 900 எடுத்துள்ளார்.

இந்த முறைகேடு குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்.

அப்போது வேலூர் பி.டி.ஓ.வாக இருந்த ரவி. பின்னர் திருப்பத்தூர் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி சில காரணங்களால் பணிஓய்வு பெறவில்லை.

துணை பி.டி.ஓ.வாக (நிர்வாகம்)இருந்த மோகன் ஆலங்காயம் யூனியனுக்கு மாற்றப்பட்ட இவரும் கடந்த 31-ந்தேதி பணி ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா, அவரது கணவர் ஆனந்தராஜ், ஆற்காடு ரோட்டில் உள்ள பைப் கடை உரிமையாளர் ஆகியோருக்கு 5 பஞ்சாயத்துகளில் 146 எல்.இ.டி. பல்புகளை ஒன்றிய பொது நிதியில் இருந்து வாங்கியதாக போலியான பில் தயாரித்து பணம் கையாடல் செய்துள்ளதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொதுவாக அரசு அலுவலகங்களில் பணம் கையாடல் செய்யும் போது அரசு அதிகாரிகள் தான் சிக்குவார்கள்.

ஆனால் இப்போது அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர், அவரது கணவர் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News