செய்திகள்

அய்யம்பேட்டை அருகே அரசு பஸ் மோதி கொத்தனார் பலி

Published On 2018-08-04 15:57 IST   |   Update On 2018-08-04 15:57:00 IST
அய்யம்பேட்டை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே கோவிலடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் சதீஷ் (வயது 29). கொத்தனார். பாட்டாளி மக்கள் கட்சியின் 1வது வார்டு செயலாளராவும் இருந்து வந்தார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சதீஷ் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கோவில் தேவராயன் பேட்டைக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். கோவிலடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை நிகழ்ச்சிக்கு வந்த போது தஞ்சை- கும்பகோணம் சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. கோவிலடி பஸ் நிறுத்தம் அருகே இருந்த வேகத்தடையும் அகற்றப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News