செய்திகள்

வையம்பட்டி அருகே 2 கடைகளில் தீ விபத்து- ரூ.40ஆயிரம் பொருட்கள் சேதம்

Published On 2018-08-03 20:16 IST   |   Update On 2018-08-03 20:16:00 IST
வையம்பட்டி அருகே மண்எண்ணை விளக்கு சரிந்து தீ பிடித்ததில் 2 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் இருந்த ரூ.40ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). இவர் அங்கு சலூன் கடை வைத்துள்ளார். அவரது கடை அருகே காமாட்சி (45) என்பவர் துணிகளை சலவை செய்து கொடுக்கும் கடை வைத்துள்ளார். இரு கடைகளும் குடிசையிலான கடைகள் ஆகும். 

இந்தநிலையில் நேற்றிரவு காமாட்சி கடையிலேயே  தூங்கினார். நள்ளிரவில் அங்கு வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த  மண்எண்ணை விளக்கு தீ திடீரென குடிசையில் பற்றி எரிந்தது. இதையடுத்து சுதாரித்து கொண்ட காமாட்சி அங்கிருந்து தப்பினார். தீ மளமளவென பற்றி எரிந்தது. அருகில் இருந்த லட்சுமணன் கடையிலும் பற்றியது. 

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மணப்பாறை நிலைய அலுவலர்  கணேசன்  தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் 2 கடைகளும்  தீயில் எரிந்து நாசமாகின. அதில் இருந்த ரூ.40ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. 

இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News