செய்திகள்

தேவகோட்டை அருகே விபத்து- ஓட்டல் ஊழியர் பலி

Published On 2018-08-01 14:50 IST   |   Update On 2018-08-01 14:50:00 IST
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கடகம்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 36). கோவையில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பர்கள் புதியராஜ் (35), உதயகுமார் (33) ஆகியோருடன் காமராஜ் நேற்று இரவு கடகம்பட்டியில் இருந்து தேவகோட்டைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்காக டீசல் வாங்கிக் கொண்டு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது.

களக்காவயல் என்ற இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிளும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காமராஜ் சம்பவ இடத்துலேயே பரிதாபமாக இறந்தார். புதியராஜின் 2 கால்களும் நசுங்கின. உதயகுமாருக்கு ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து பற்றி அறிந்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வேனை ஓட்டி வந்த வேன் டிரைவர் வெங்கட்ராமன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News