செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி - தினகரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2018-08-01 08:01 GMT   |   Update On 2018-08-01 08:01 GMT
பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலியாக அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #TTVDhinakaran
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளரும், எம்.எல். ஏ.வுமான டி.டி.வி. தினகரனின் வீடு அடையாறில் உள்ளது.

கடந்த 29-ந்தேதி, அ.ம.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புல்லட் பரிமளம் என்பவர் காரில் அங்கு வந்தார். அவர் தான் கொண்டுவந்த உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது காரும் தீப்பிடித்தது. அதன் கண்ணாடிகளும் உடைந்தன.

இது தொடர்பாக புல்லட் பரிமளத்தின் கார் டிரைவர் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள், வீட்டின் மீது திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

தினகரன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரது வீட்டுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும், சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளரிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #TTVDhinakaran


Tags:    

Similar News