செய்திகள்

என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும்: அமைச்சர் அன்பழகன்

Published On 2018-07-31 11:26 GMT   |   Update On 2018-07-31 11:26 GMT
தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #TNMinister #Anbazhagan
நெல்லை:

நெல்லையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அகில இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோர் 25.2 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு உயர்கல்வி பயில்வோர் 46.8 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது மேலும் 2.1 சதவீதம் உயர்ந்து 48.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து, அடுத்த கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களை விட விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. எனவே எல்லோருக்கும் இடம் கிடைக்கும்.

வருகிற செப்டம்பர் 1-ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்கவும், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அதிகம் மாணவர் சேர்கைக்கும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் அதிகம் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க தனியார்கள் சார்பாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க பரிசீலனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Anbazhagan
Tags:    

Similar News