செய்திகள்

வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-07-31 10:20 GMT   |   Update On 2018-07-31 10:20 GMT
வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது இந்திராநகர் காலனி. இங்கு 40 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் சரிவர வினியோகிக்கவில்லை என்று மக்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் யூனியன் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பழைய வத்தலக்குண்டு பிரிவில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மறியல் செய்த மக்களிடம் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். #tamilnews
Tags:    

Similar News