செய்திகள்

திருமங்கலம் அருகே நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி - கல்லூரி முதல்வர்-ஆசிரியை மீது புகார்

Published On 2018-07-29 09:42 GMT   |   Update On 2018-07-29 09:42 GMT
திருமங்கலம் அருகே மாடியில் இருந்து குதித்த நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேரையூர்:

மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகள் சங்கீதா (வயது 18). இவர் கூடக்கோவில் அருகே எலியார்பத்தியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சிக்காக கல்லூரியைச் சேர்ந்த மருத்துவமனைக்கு சங்கீதா சென்றார். அப்போது ஒரு வாலிபர் கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் சங்கீதாவை சில நாட்களுக்கு சஸ்பெண்டு செய்தது.

இந்த நிலையில் மீண்டும் கல்லூரி திரும்பிய சங்கீதா விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. கல்லூரி முதல்வர் ஹெலன் பிரிட்டா, ஆசிரியை கல்பனா ஆகியோர் தற்கொலைக்கு தூண்டும் வகையில் தொல்லை கொடுத்ததாக புகாரில் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News