செய்திகள்

சிறுத்தையை கொன்று தோல் விற்க முயற்சி- முக்கிய குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published On 2018-07-28 16:21 GMT   |   Update On 2018-07-28 16:21 GMT
உடுமலை அருகே சிறுத்தையை கொன்று தோலை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

உடுமலை:

உடுமலை ருத்ரா பாளையத்தல் சிறுத்தை தோல் விற்பனை செய்ய முயன்றதாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தருமத்தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 37).

பன்றிமலை அமைதிச் சோலையை சேர்ந்த பாலுசாமி (70) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அவரிகளிடம் இருந்து 2 வயது சிறுத்தையின் பதப்படுத்தப்பட்ட தோல் பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியது யார்? எந்த வனப்பகுதியில் சிறுத்தை கொல்லப்பட்டது.

தோல் மட்டும் கிடைத்த நிலையில் நகம், பல் உள்ளிட்ட பொருட்கள் என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுத்தை தோலை வாங்க முயன்ற நபரை இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லை.

இது குறித்து அமராவதி வனச்சரக அலுவலர் முருகேசன் கூறும்போது, சிறுத்தை தோலை விற்க முயன்ற இருவர் கோர்ட்டு உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சேகர் என்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News