செய்திகள்

பண்ருட்டியில் அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல்- பெண் கைது

Published On 2018-07-28 15:08 IST   |   Update On 2018-07-28 15:08:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூரிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு செல்லும் அரசு பஸ் பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ்சை பிரபு (43) என்பவர் ஓட்டி வந்தார்.

பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை நிறுத்த முயன்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த பாலு என்பவரது மனைவி ரெஜினா என்பவரை ஓரமாக போய் நிற்கும்படி கூறினார். இதில் ஆத்திரமடைந்த ரெஜினா, டிரைவர் பிரபுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி பிரபு பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா வழக்குப்பதிவு செய்து ரெஜினாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் ரெஜினா அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News