செய்திகள்

கீழப்பாவூரில் திமுக தெருமுனை பிரசார கூட்டம்

Published On 2018-07-27 20:30 IST   |   Update On 2018-07-27 20:30:00 IST
கீழப்பாவூர் பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூர் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபாலன் வரவேற்றார். ஊராட்சி செயலர் மதிச்செல்வன் தொகுத்து வழங்கினார். 

கூட்டத்தில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன், தலைமைக்கழக பேச்சாளர்கள் சரத்பாலா, வேங்கை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் நிர்வாகிகள் ராஜாமணி, மேகநாதன், தளபதி முருகேசன், நாகராஜ், பொன்லதா சிவகுமார், ராஜேந்திரன், தங்கசாமி, சிவன், மாடசாமி, ஆறுமுகநயினார், ராஜன், ராமசாமி, வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் குமணன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News