செய்திகள்

மண்ணச்சநல்லூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டுக்கு சீல்வைப்பு

Published On 2018-07-27 17:51 IST   |   Update On 2018-07-27 17:51:00 IST
மண்ணச்சநல்லூர் அருகே வாங்கிய கடனை காலக்கெடுவுக்குள் கட்டத் தவறியதால் வங்கி அதிகாரிகள் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டுக்கு சீல்வைத்தனர்.
மண்ணச்சநல்லூர்:

மண்ணச்சநல்லூர் உப்புகார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் ( வயது 50). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கேபிள் டி.வி. ஆப்பரேட்டராக உள்ளார். அதே ஊர் வெள்ளைச் செட்டித்தெருவை சேர்ந்த பெரியண்ணன், இந்திரா நகரை சேர்ந்த ராஜலட்சுமி. இவர்கள் 3பேரும் தொழில் செய்வதற்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள வங்கியின் வீட்டு அடமான பத்திரம் வைத்து கடன் வாங்கியதாக தெரிகிறது.

வாங்கிய கடனை காலக்கெடுவுக்குள் கட்டத் தவறியதால் , வங்கி அதிகாரிகள் மதுரையில் கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் படி மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகா , மண்டல துணை தாசில்தார் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்தனர். பின்னர் வீட்டுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News